Thursday, November 8, 2018

Youtube வீடியோக்களை நேரிடையாக தரவிறக்கம் செய்ய

Youtube வீடியோக்களை நேரிடையாக தரவிறக்கம் செய்ய

Youtube தளத்திலிருந்து வீடியோக்களை மூன்றாம் நிலை மென்பொருள்கள் இல்லாமல் நேரிடையாக உலாவி (Browser)   துணையுடன் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். Youtube வீடியோக்களை எளிமையாக பதிவிறக்கம் செய்ய நீட்சி (Add-on) பயன்படுகிறது. 

நீட்சிகளை தரவிறக்கம் செய்ய முகவரி :- 

கூகுள் குரோம், நெருப்புநரி மற்றும் ஒபேரா உலாவிகளில் இந்த நீட்சிகளை மேலே கொடுக்கப்பட்டுள்ள தரவிறக்க முகவரிகளை பயன்படுத்தி தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும். பின் Youtube தளத்திற்கு சென்று வீடியோவினை காணும் போது வீடியோவிற்கு கீழ் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு இருக்கும் அதனை பயன்படுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளவும்.



மேலே கூறப்பட்டுள்ள முறையினை பயன்படுத்தி கூகுள் குரோம், நெருப்புநரி மற்றும் ஒபேரா ஆகிய உலாவிகளில் Youtube வீடியோக்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

Sunday, November 27, 2011

யு-டியூப்பில் இருந்து வீடியோக்கள் டவுண்லோட்


யு–ட்யூப்பில் பதிந்து வைத்துள்ள வீடீயோ கிளிப்கள் எதைப் பார்த்தாலும், உடனே அதனை டவுண்லோட் செய்து இறக்கி வைத்துக் கொள்ள ஆசையாக இருக்கும். இதற்காகவே பல யு–ட்யூப் டவுண்லோட் புரோகிராம்கள் பல இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றில் பல கண்டிஷன்கள் இருக்கும். சில 60% மட்டுமே டவுண்லோட் செய்திடும். சில 10 அல்லது 20 முறை மட்டுமே டவுண்லோட் செய்திட அனுமதிக்கும். சில குறிப்பிட்ட நாள் வரை மட்டுமே இயங்கும். அல்லது கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும்.இவற்றின் மூலம் ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே டவுண்லோட் செய்திட முடியும். ஒரே நேரத்தில் பல யு–ட்யூப் வீடியோக்களை முழுமையாக டவுண்லோட் செய்திடும் வகையில் இணையத்தில் புரோகிராம் ஒன்று கிடைக்கிறது. இதன் பெயர் 1Click YouTube Batch Downloader. இதனை http://eurekr.com /index.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். ஒன்றுக்கு மேற்பட்ட யு–ட்யூப் வீடியோக்களை, அவற்றின் இணையதள முகவரி சென்று தேடிப் பெற்று காப்பி செய்வதனைக் காட்டிலும், இதன் மூலம் ஒரேகிளிக்கில் காப்பி செய்திடலாம். அது மட்டுமின்றி, இந்த வீடியோக்களை mp4, wmv, மற்றும் mov என்ற பார்மட்டுகளுக்கு மாற்றவும் இந்த புரோகிராம் உதவுகிறது. அத்துடன் பல வீடியோ பைல்களை ஒரே பைலாக மாற்றும் வசதியையும் இது தருகிறது.

இலவச Antivirus 'களில் எது சிறந்தது?



இலவச Antivirus புரொகிராம்களில் எது சிறந்தது என்று கேட்டால் அனைவரும் கூறுவது avast 'தான். ஆனால் நான் பயன்படுத்தி பார்த்ததில் அதிக வைரஸ்களை அழித்து. மெமரியும் குறைவாகப் பயன்படுத்தி முதலிடம் பிடித்தது Avira 'தான். ஏன் என்பதை கீழே கொடுத்துள்ளேன்.


AVIRA

  1. அற்புதமான இலவச Antivirus. விலை கொடுத்து வாங்கும் ஆன்டிவைரசே சில வைரஸ்களை கோட்டை விடுகையில் இலவச ஆன்டிவைரஸான Avira பெரும்பாலான வைரஸ்களை முழுமையாக‌ அழிக்கிறது.
  2. குறிப்பாக New Folder.exe போன்ற வைரஸ்களை அழிப்பதில் சிறப்பாக செயல்படுகிறது.
  3. வெறும் 2MB யிலிருந்து 4MB வரையே மெமரியை எடுத்துக்கொன்டு கணினியை பாதுகாப்பதில் திற‌ம்பட செயல் படுகிறது.
  4. இதற்கான அப்டேட்டுகளை நாம் தான் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
      Download link

      AVAST

      1. பலராலும் பயன்படுத்தப்படும் அற்புதமான இலவச ஆன்டிவைரஸ் என்னுடய மதிப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
      2. ஒரு சில வைரஸ்களை விட்டுவிடுகிறது. எடுத்துக்காட்டாக ( New Folder.exe, Recycler ) போன்ற வைர்ஸ்களை கண்டுபிடிப்பதே இல்லை.
      3. வைரஸ்களை களைய‌ நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது. இதுவும் அதிக மெமரியை எடுத்துக் கொள்ளவில்லை.
      4. சில வினாடிகளில் தாமாகவே அப்டேட் செய்து கொள்ளும்.

      Download Link


        AVG

        1. AVG Antivirus பயன்படுத்தினால் விண்டோஸ் துவங்குவதற்க்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.
        2. இது குறைவாக 30MB மெமரியை ஆக்ரமித்துக் கொண்டது.
        3. இதுவும் வைரஸ்களை களைவதில் சிறப்பாக செயல்படுகிறது.
        4. இதனுடய இன்டெர்ஃபேஸ் சற்று பழயதாக இருக்கும்.

        Download Link

          Saturday, November 26, 2011

          'ஆப்பிள்' உருவான கதை...
          மற்ற மாணவர்கள் எல்லாம் ஒய்வு நேரத்தை மைதானங்களில் செல்விடுவார்கள் என்றால், உயர் நிலை பள்ளியில் படித்து கொண்டிருந்தபோதே ஜாப்ஸ், எச் பி நிறுவனத்தில் உரைகளை கேட்டு ரசித்து கொண்டிருந்தார். இங்கு தான் அவருக்கு ஆப்பிளின் மற்றொரு நிறுவனரான ஸ்டீவ் வாஸ்னியாக்கை சந்திக்கும் வாய்ப்பு உண்டானது.

          1972-ல் ஸ்டீவ் ஜாப்ஸ் பள்ளியை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் ஒரு செமஸ்டருக்கு பிறகு படிப்பில் அவர் மனம் செல்லவில்லை. தத்துவ ஈடுபாடும் எதிர் கலாசார ஆர்வம் அவரை அலைக்கழித்தன. அடுத்த ஆண்டே படிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு வீடியோ கேம் முன்னோடி நிறுவனமான அட்டாரியில் வேலைக்கு சேர்ந்துவிட்டார்.

          அட்டாரியிலும் அவருக்கு ஈடுபாடு இல்லாமல் போகவே ஆன்மிக தேடலோடு இந்தியாவுக்கு வந்து சுறித்திரிந்தார். கிளர்ச்சியை தரக்கூடிய போதை வஸ்துவை பயன்படுத்துவது என்றெல்லாம் தடம் மாறி அலைந்த ஜாப்ஸ் 1976-ல் அமெரிக்கா திரும்பினார். அப்போது அவருக்கு 21 வயது. நண்பர் வாஸ்னியோக் கம்ப்யூட்டர் கிளப் ஒன்றை நடத்தி கொண்டிருந்தார். ஜாப்ஸ் அதில் தன்னை இணைத்து கொண்டார்.

          அந்த காலத்தில் எல்லாம் கம்ப்யூட்டர் என்றால் மைன்பிரேம் கம்ப்யூட்டர் தான். ஒரு பெரிய வீட்டின் அளவுக்கு இருந்த மைன்பிரேம் கம்ப்யூட்டர்களை எல்லோரும் பயன்ப‌டுத்திவிட‌ முடியாது. கொஞ்சம் தொழில்நுட்ப அறிவு இருந்தால் தான் அதன் பக்கமே போக முடியும்.

          வாஸ்னியோக் இதில் கில்லாடியாக இருந்தார். ஆனால் ஜாப்ஸுக்கு கம்ப்யூட்டர் உருவாக்கத்தைவிட தன்னை மார்க்கெட் செய்வதில் தான் ஆர்வம் இருந்தது. எல்லோரும் பயன்ப‌டுத்தக்கூடிய ஓர் எளிமையான கம்ப்யூட்டரை உருவாக்கி விற்பனை செய்ய வேண்டும் என்று நண்பர் வாஸ்னியோக்கிடம் அவ‌ர் வலியுறுத்தினார்.

          வாஸ்னியாக் அதற்கு ஒப்புக்கொள்ளவே நண்பர்கள் ஒன்று சேர்ந்து புதிய நிறுவனத்தை உருவாக்கினார். ஜாப்ஸ், 'பீட்டில்ஸ் இசைகுழு'வின் பரம ரசிகர் என்பதால், அக்குழுவின் பாடல் ஒன்றின் பெயரான ஆப்பிள் என்பதையே நிறுவனத்துக்கு பெயராக வைத்து விட்டார்.

          இருவரும் கையில் இருந்த பணத்தை முதலீடாக போட்டு நிறுவன‌த்தை துவக்கி கம்ப்யூட்டர் வடிவமைப்பில் ஈடுபட்டனர். ஜாப்ஸின் வீட்டு கேரேஜ் தான் அவர்களது அலுவலகம், ஆய்வுகூடம். அதுவே தான் நிறுவனம்.

          கூகுள் தரும் புதிய வசதிகள்

          வழக்கமான செமி கோலன் மற்றும் பிராக்கெட் மட்டுமே வைத்து அமைத்திடும் எமோட்டிகான்களிடமிருந்து
          விடுதலை பெறுங்கள்.

          கூகுள் மெயில் அண்மைக் காலமாக சில புதிய வசதிகளைத் தந்துள்ளது. இவற்றை ஒரு சிலரே கவனித்துப் பயன்படுத்தி வருகின்றனர். பலருக்கு இது போன்று வசதிகள் உள்ளன என்று தெரிய வாய்ப்புகள் இல்லாமல் உள்ளனர். சிலர் பயன்படுத்தி வந்தாலும் அனைவரும் அறிந்து கொள்ள இந்த வசதிகள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.

          * வண்ண லேபிள்கள் (Colored labels) : இந்த வண்ண லேபிள்கள் மூலம் உங்களுக்கான இமெயில்களை வகைப் படுத்த வசதியாக இருக்கும். ஒவ்வொரு லேபிள் பக்கத்தில் இருக்கும் கலர் பட்டி மீது கிளிக் செய்து ஒவ்வொரு மெயிலுக்கும் வண்ண லேபிள்களைக் கொடுங்கள்.


          * குரூப் சாட்டிங் (Group chat) : சாட்டிங் எனப்படும் அரட்டையில் பலருடன் பேச வேண்டும் என்றால் ஒவ்வொருவருக்கும் ஒரு விண்டோவினைத் திறந்து பேச வேண்டும். இப்போது இந்த சிரமம் களையப்பட்டு ஒரே விண்டோவில் அனைவருடன் பேசும் வசதி தரப்படுகிறது. இது போன்ற ஒரு குரூப் சேட்டிங் தொடங்க சாட்டிங் செய்து கொண்டிருக்கையில் ஆப்ஷன்ஸ் மெனுவிலிருந்து குரூப் சேட் என்பதனை கிளிக் செய்திடவும். அடுத்தடுத்து வருபவை எல்லாம் ஒரே விண்டோவில் கிடைக்கும்.


          * புதிய எமோட்டிகான்கள் (emoticons) : உங்கள் உணர்வுகளை நகைச்சுவையுடன் வெளிப்படுத்த பல புதிய எமோட்டிகான்கள் வடிவமைக்கப்பட்டு தரப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி உங்கள் நண்பர்களை ஆச்சரியப்படுத்துங்கள். வழக்கமான செமி கோலன் மற்றும் பிராக்கெட் மட்டுமே வைத்து அமைத்திடும் எமோட்டிகான்களிடமிருந்து விடுதலை பெறுங்கள்.


          * இலவச ஐ–மேப் வசதி (Free IMAP) : இதன் மூலம் உங்கள் இன் – பாக்ஸில் என்ன மாற்றங்கள் ஏற்படுத்தினாலும் அது நீங்கள் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம் அமைகிறது. மொபைல் போன் வழியே இன் – பாக்ஸ் பார்த்தாலும் டெஸ்க் டாப் வழி யேபார்த்தாலும் இந்த மாற்றங்கள் காட்டப்படுகின்றன.


          * மற்ற அக்கவுண்ட் இமெயில்கள்: உங்களுக்கு உள்ள வேறு இமெயில் அக்கவுண்ட்டுகளுக்கு வரும் இமெயில் கடிதங்களை கூகுள் மெயிலில் இருந்தே பெற்றுப் பார்க்கலாம். இது போல ஐந்து வேறு வேறு இமெயில் அக்கவுண்ட்களைப் பார்க்க கூகுள் மெயில் அனுமதிக்கிறது.


          அவை அனைத்தும் கூகுள் மெயில் அக்கவுண்ட்டிலேயே வைத்துக் கொள்ளவும் செய்கிறது. இவற்றிற்குப் பதிலளிக்க வேண்டுமாயின் அதற்கெனவே தனி ‘from’ address வடிவமைத்துத் தருகிறது. இதனால் பதில் கூகுள் தளத்திலிருந்து வருகிறது என்று அதனைப் பெறுபவர்களுக்குத் தெரியாது. ஆனால் வேறு இமெயில் அக்கவுண்ட்டுகள் அதிலிருந்து உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்திடும் வசதி கொண்ட அக்கவுண்ட்டாக இருக்க வேண்டும். வெப் சர்வரிலேயே வைத்துப் பார்க்கும்படியானதாக இருக்கக் கூடாது.